தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்கத்தில் ரயில் நிலைய தண்ணீர் தொட்டி பிளாட்பாரத்தில் விழுந்து கோர விபத்து - 3 பேர் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:14 PM IST

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தின் தண்ணீர் தொட்டி பிளாட்பாரத்தின் மீது விழுந்த கோர விபத்தில் பெண் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

பர்த்வான் : மேற்கு வங்கம் மாநிலத்தில் பர்த்வான் ரயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு, ரயில் நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரத்தில் இன்று (டிச. 12) மதியம் 12 மணி வாக்கில் ரயிலுக்காக பயணிகள் காத்துக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது எதிர்பாரத விதமாக பிளாட்பாரத்தின் மேற்கூறையின் மேல் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்தது.

தண்ணீர் தொட்டி உடைந்த விழுந்த வேகத்தில் மேற்கூரையும் நொறுங்கி கீழே நின்று கொண்டு இருந்த பயணிகள் மேல் விழுந்தது. இந்த கோர விபத்தில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மட்டும் ரயில்வே போலீசார், பொது மக்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட மூன்று பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாலத்துடன், தண்ணீர் தொட்டி இணைத்து அமைக்கப்பட்டு உள்ளதாகவும், நடைபாலத்தில் ஒரு புறம் எஸ்கலேட்டர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் தொட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட நிலையில், அதிக பாரம் தாங்க முடியாமல் கூட இந்த கோர விபத்து நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 30 பேர் இந்த கோர சம்பவத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து - சபநாயகர் ஓம் பிர்லா!

ABOUT THE AUTHOR

...view details