தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீரின் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 4:11 PM IST

Baramulla's Uri encounter: காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஜம்மு காஷ்மீர்:வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் ஹத்லங்கா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. பாரமுல்லா மாவட்ட காவல் துறையினர் மற்றும் ராணுவ வீரர்களின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றது.

பாதுகாப்புப் படையினரின் இந்த கூட்டுக் குழு, அப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தது. அப்போது, பாரமுல்லா மாவட்டம் ஹத்லங்கா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

பாதுகாப்புப் படையினரின் வருகையை அறிந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை வெளியிட்டுள்ள தகவலில், "பராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி, ஹத்லங்காவின் முன்னோக்கி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவம் மற்றும் பாரமுல்லா காவல் துறையினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்றார்.

முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் டிஎஸ்பி ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீர் பயங்கராவாத தாக்குதலில் மூன்றாம் தலைமுறை ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details