தமிழ்நாடு

tamil nadu

பிசிசி உறுப்பினர்கள் 12 பேர் திடீர் விலகல்.. கேசிஆர் சர்வாதிகாரி என குற்றச்சாட்டு!

By

Published : Dec 19, 2022, 1:32 PM IST

தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 12 உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்தனர். தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் சர்வாதிகாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 12 பேர் திடீர் விலகல் - கேசிஆர் சர்வாதிகாரி என குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஆந்திர- தெலங்கானா பிரிவின் போது அமைக்கப்பட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி (பிசிசி) கட்சியில் இருந்து 12 தெலங்கானா தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று (டிச.19) அதிகாலையில் கட்சியின் தலைவரிடம் 12 உறுப்பினர்களும் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். மேலும் கட்சியில் இருந்த மூத்த கட்சி விசுவாசிகளை விடுத்து புதிய உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழும்பியதையடுத்து இந்த ராஜினாமா நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.சி.ஆரை பதவி நீக்கம் செய்ய வலுவான போராட்டம் தேவை எனவும் கூறியுள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களில் தெலங்கானா எம்எல்ஏ சீதக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய கட்சி உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்கள் என மக்களவை உறுப்பினர் உத்தம் குமார் ரெட்டி குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றிய தலைவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இமாச்சல் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details