தமிழ்நாடு

tamil nadu

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட வாய்ப்பு

By

Published : Dec 11, 2020, 5:08 PM IST

டெல்லியில் காற்றின் வேகம் மற்றும் லேசான மழையின் காரணமாக காற்றின் தடம் சற்று மேம்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Strong winds, light rain likely to improve Delhi's air quality
Strong winds, light rain likely to improve Delhi's air quality

டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் இன்று மோசமான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காற்றின் வேகம் மற்றும் லேசான மழையின் காரணமாக அடுத்த இரண்டு நாள்களில் தரம் கணிசமாக மேம்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று(டிச. 11) காலை 9 மணி நிலவரப்படி, காற்றின் தர குறியீடு 271 ஆக இருந்தது. இவை நேற்றைய நிலவரப்படி சராசரி 284 ஆக இருந்தது.

அண்டை நகரங்களான காசியாபாத், கிரேட்டர் நொய்டா மற்றும் நொய்டா ஆகியவை முறையே 330, 322, 310 என மிகவும் மோசமான பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.

காற்றோட்டம் மற்றும் மழைப்பொழிவு ஏற்பட்டால் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் காற்றின் தரம் கணிசமாக மேம்படும் என்று டெல்லிக்கான மத்திய அரசின் காற்று தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகரம் மற்றும் அதன் அண்டை நகரங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றின் அதிகபட்ச காற்றின் வேகம் 15 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது மாசுபடுத்திகளை சிதறச் செய்வதற்கு சாதகமானதாக இருப்பதாகவும் தெரிகிறது.

இதனால் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வரும் திங்கள்கிழமைக்குள் 8 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் மிதமான கட்டத்திற்கு மாறிய காற்று மாசு

ABOUT THE AUTHOR

...view details