தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Aug 17, 2022, 3:34 PM IST

Updated : Aug 17, 2022, 3:41 PM IST

தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து வலியுறுத்தப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து வலியுறுத்தப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லி:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஒரு நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை தனித்தனியாக மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “குடியரசுத்தலைவரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீட், புதிய கல்விக்கொள்கை, மின்சாரம், காவிரி மற்றும் மேகதாது போன்ற பல கோரிக்கைகள் தொடர்ந்து வைத்திருக்கும் நிலையில், மீண்டும் பிரதமரிடம் இதே கோரிக்கைகள் குறித்து இன்று மாலை நேரில் சந்தித்து எடுத்துரைப்பேன்.

தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்படும். ஏற்கெனவே இருந்த குடியரசுத்தலைவரிடம் நீட் தேர்வு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. புதிய குடியரசுத்தலைவரை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” எனத்தெரிவித்தார்.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அரசியலுக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.

குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

Last Updated : Aug 17, 2022, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details