தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு!

By

Published : May 22, 2021, 4:56 PM IST

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கி நடைபெறும் என ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

Sputnik vaccine
Sputnik vaccine

இந்தியாவில் முதற்கட்டமாக கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்த நிலையில், கடந்த வாரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தத் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ”இந்தியாவிற்கு இதுவரை சுமார் இரண்டு லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்கள் ரஷ்யாவிலிருந்து கிடைத்துள்ளன. மே மாத இறுதிக்குள் 30 லட்சம் டோஸ்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்தில் 50 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 80% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"ஜப்பானில் அவசர நிலை அமலில் இருந்தாலும், ஒலிம்பிக்கை நடத்துவோம்"

ABOUT THE AUTHOR

...view details