தமிழ்நாடு

tamil nadu

"அதானி குழுமத்தில் சந்தேகப்படும் வகையிலான முதலீடுகள்" - நீதிபதிகள் குழு அறிக்கை!

By

Published : May 21, 2023, 2:35 PM IST

அதானி குழும பங்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளதாக நீதிபதிகள் குழு வெளியிட்ட அறிக்கையி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Adani
Adani

டெல்லி :அதானி குழும பங்குகளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக வர்த்தகம் செய்த ஆறு நிறுவனனங்கள் குறித்து விசாரித்து வருவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான வல்லுநர்கள் குழு தெரிவித்து உள்ளது. கண்டறியப்பட்ட 6 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டுகளை பெற்றுத் தரும் நிறுவனங்கள் என கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செயற்கை முறையில் பங்குகளின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்ததாக அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டது. இந்நிலையில், முன்னாள் நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழு அதானி முறைகேடு புகார் குறித்து அறிக்கை அளித்து உள்ளது. அதில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய பரிவர்த்தனைகளில் அதானி குழும பங்குகளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக ஆறு நிறுவனனங்கள் வர்த்தகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவன்ங்கள் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான வல்லுநர்கள் குழு தெரிவித்து உள்ளது. வர்த்தக பரிவர்த்தணைகளில் அதானி நிறுவனம் தொடர்பாக பாதகமான செய்ல்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், ஆறு நிறுவனங்களின் தரப்பில் சந்தேகத்திற்கிடமான வர்த்தகம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த நிறுவனங்களில் நான்கு FPI-ஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவன்ங்கள், ஒரு கார்ப்பரேட் மற்றும் ஒரு தனிநபர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த நிறுவன்ங்களின் பெயர்களை அந்த அறிக்கையில் வெளியிட நீதிபதிகள் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி; அவரது ஆடையின் விசேஷம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details