தமிழ்நாடு

tamil nadu

தும்கா சிறுமி கொலை வழக்கு... சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு...

By

Published : Aug 30, 2022, 4:58 PM IST

தும்கா சிறுமி எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து ஜார்க்கண்ட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

SIT
SIT

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில், காதலிக்க மறுத்ததற்காக 12ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி, எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷாருக் உசேன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தும்காவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தன்னைத் தாக்கிய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என இறப்பதற்கு முன்பு சிறுமி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தும்கா சிறுமி கொலை தொடர்பாக விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை ஜார்க்கண்ட் காவல் துறை அமைத்துள்ளது. தும்கா காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மரண தண்டனை கொடுங்க... தும்கா சிறுமியின் இறுதி வாக்குமூலம்...

ABOUT THE AUTHOR

...view details