தமிழ்நாடு

tamil nadu

ஆசியா பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பிவி சிந்து!

By

Published : Apr 30, 2022, 5:30 PM IST

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி., சிந்துஅரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆசியா பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பிவி சிந்து!
ஆசியா பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பிவி சிந்து!

மணிலா (பிலிப்பைன்ஸ்):ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் நடந்துவருகிறது. இதற்கான நேற்றைய போட்டியில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் சீனா வீராங்கனை ஹி பீங் ஜியோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனையடுத்து அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யமாகுச்சிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த பி.வி. சிந்து முதல் செட்டில் 21-13 எனப் போட்டியை தன் வசமாக்கினார்.

அடுத்த செட்டிலும் 13-11 எனப் பாயிண்டுகளை குவித்தவர் திடீரென நேர விரயத்திற்காக பெனாலிட்டியாக மதிப்பெண்ணை இழந்தார். இதன் பின்னர் எழுச்சி கொண்டு இரண்டாவது செட்டை அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

பின்னர் 3 செட்களுக்கு 2 செட்களை இழந்து சிந்து அரையிறுதியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அவரது இரண்டாவது பதக்கத்தை பெற்றார். இதற்கு முன்னதாக 2014 சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தேசிய போட்டிகளில் யமாக்குச்சியை விட 13-9 என மொத்த போட்டிகள் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.

இதையும் படிங்க:GT vs RCB: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்

ABOUT THE AUTHOR

...view details