தமிழ்நாடு

tamil nadu

பீகாரில் தொடர் ஏடிஎம் திருட்டு - 17 ஏடிஎம்களை மூடிய போலீஸ்

By

Published : Jul 16, 2022, 9:19 PM IST

பீகாரின் கோபால்கஞ்சில் கடந்த சில மாதங்களாக ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. காவல் துறை திருடர்களை பிடிப்பதற்கு பதிலாக, மாவட்டத்தில் உள்ள 17 ஏடிஎம்களை மூடியுள்ளனர்.

பீகாரில் தொடர் ஏடிஎம் திருட்டால் 17 ஏடிஎம்களை மூடிய போலீஸ், பொதுமக்கள் அவதி
பீகாரில் தொடர் ஏடிஎம் திருட்டால் 17 ஏடிஎம்களை மூடிய போலீஸ், பொதுமக்கள் அவதி

பீகாரின் கோபால்கஞ்சில் கடந்த சில மாதங்களாக ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. காவல் துறை திருடர்களை பிடிப்பதற்கு பதிலாக, மாவட்டத்தில் உள்ள 17 ஏடிஎம்களை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் டிஜிட்டல் இந்தியாவுக்காக மத்திய அரசு பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது குறித்து மக்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஏடிஎம் இயந்திரங்கள் கிராமம் கிராமமாக நிறுவப்பட்டு வருகின்றன.

ஆனால் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பல கிராமங்களில் நிறுவப்பட்ட 17 ஏடிஎம் இயந்திரங்கள் கோபால்கஞ்ச் காவல் துறையால் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ​ஏடிஎம் இயந்திரத்தை அடிக்கடி திருடர்கள் திருடிச் செல்வது அதிகரித்துள்ளதால், கிராமப்புறங்களில் உள்ள 17 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், அந்த ஏடிஎம்களை சுற்றியுள்ள பல கிராம மக்கள் தங்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பெரும் அவதிக்களாகியுள்ளனர். மேலும், ஏடிஎம்கள் மூடப்பட்டதால் வெளியூர் அல்லது நகர பகுதிகளுக்கு சென்று தான் பணம் எடுக்க வெண்டியுள்ளது எனவும் காவல் துறை திருடர்களை பிடிப்பதற்கு பதிலாக ஏடிஎமை மூடியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:உ.பி.,யில் 49 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு - இரும்பு சத்து மாத்திரை காரணமா?

ABOUT THE AUTHOR

...view details