தமிழ்நாடு

tamil nadu

இரண்டாவது பேட்ச் ஸ்புட்னிக் தடுப்பூசி அடுத்த வாரத்தில் இந்தியா வரும் - ரஷ்ய நிறுவனம்!

By

Published : May 15, 2021, 7:31 AM IST

ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களின் இரண்டாவது தவணை அடுத்த வாரத்தில் இந்தியாவுக்கு வரும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sputnik V
Sputnik V

இந்தியாவில் ஸ்புட்னிக் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தெலங்கான தலைநகர் ஹைதரபாத்தில் குறைந்த செயல்திட்ட வடிவில் நேற்று (மே 14) தொடங்கப்பட்டது. மே 1ஆம் தேதி ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்கள் இந்தியா வந்த நிலையில், மருந்தக சோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான விலையை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி அறிவித்துள்ளது.

தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ.995ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கியப் பின்னர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவிலேயே தயாரிக்க டாக்டர் ரெட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு அடுத்த வாரத்தில் இரண்டாவது தவணை ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பிவைக்கப்படும் என ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 65 நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கோவிட்-19 கட்டுக்குள் வரும் என நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'மக்கள் அனுபவித்த வலிகளை உணர்ந்தேன்'- மோடி

ABOUT THE AUTHOR

...view details