தமிழ்நாடு

tamil nadu

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு எப்போது?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 6:19 PM IST

Article 370 case in SC: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மற்றும் தீர்ப்பை ஓத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sc-reserves-verdict-on-pleas-challenging-the-abrogation-of-article-370
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு எப்போது?

டெல்லி: இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் கடந்த 16 நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மற்றும் தீர்ப்பை வரும் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 16 நாட்களாக ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தவே, ஜாபர் ஷா, கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.

உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான மனுதாரர்கள் வாதம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சஜ்ஜாத் லோன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான் கூறும் போது, 1947ல் இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீர் இணைப்பின் போது அளித்த வாக்குறுதியை மீறுவதற்கு வரலாற்று ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் இணைப்பிற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது என தெரிவித்தார்.

முகமது அக்பர் லோன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும் போது, ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் உள்ளனர். ஆனால் 370 பிரிவின் கீழ் அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கு விசாரணை மீண்டும் அடுத்த செவ்வாய் கிழமை (செப்.12)அன்று தொடங்கும் மேலும் அதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என கூறி வழக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் லுக் அவுட் நோட்டீஸ் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

ABOUT THE AUTHOR

...view details