தமிழ்நாடு

tamil nadu

சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு...!

By

Published : Nov 10, 2022, 9:15 AM IST

சிவசேனா மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பத்ராசால் குடியிருப்புப் பகுதியை மாற்றி அமைப்பதில் நில முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பத்ரா சால் (வரிசை குடியிருப்பு) மறுமேம்பாடு தொடர்பாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ராவத்தை கடந்த ஜூலை மாதம் அமலாக்க துறை(ED) கைது செய்தது. தற்போது நீதிமன்ற காவலில் உள்ள அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சஞ்சய் ராவத் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு எதிரான வழக்கு "அதிகார துஷ்பிரயோகம்" மற்றும் "அரசியல் பழிவாங்கல்" ஆகியவற்றுக்கு சரியான உதாரணம் என்று கூறியிருந்தார்.

பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி எம் ஜி தேஷ்பாண்டே, இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின் ராவத்தின் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பின்னர், ராவத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றதில் மனுதாக்கல் செய்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க:சாரோனை கொல்ல 10 முறை முயற்சி... காதலியின் பகீர் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details