தமிழ்நாடு

tamil nadu

250 ரூபாய் கூட அப்போ இல்லை : பெண்களுக்கு அடித்த ரூ.10 கோடி பம்பர் பரிசு.!

By

Published : Jul 29, 2023, 5:10 PM IST

மலப்புரத்தைச் சேர்ந்த ஹரித கர்ம சேனா துப்புரவு பணி செய்யும் 11 பெண்கள் இணைந்து, 250 ரூபாய் கொடுத்து வாங்கிய "மழைக்கால லாட்டரி"-யில் 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்திருப்பது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மலப்புரம்:கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடியை சேர்ந்தவர்கள் ஹரித கர்ம சேனா குழுவின் 11 துப்புரவுப்பணி தொழிலாளர்கள். இந்த குழுவைச் சேர்ந்த, 11 பேரும் சேர்ந்து அம்மாநில அரசின் "மழைக்கால பம்பர் லாட்டரி" சீட்டை 250 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த சீட்டின் குலுக்கல் கடந்த புதன் கிழமை நடைபெற்ற நிலையில் அந்த துப்புரவு பணி செய்யும் பெண்கள் எடுத்த MB 200261 என்ற லாட்டரி டிக்கெட்டிற்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.

ஆனால் தங்களுக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருப்பது தெரியாத அந்த பெண்கள், இது குறித்து தகவல் அறிந்ததும் ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர். அதிர்ஷ்டசாலிகளான ஷீஜா, பார்வதி, பிந்து கொழுக்குமல், லீலா குருளில், ரஷ்மி புல்லாஞ்சேரி, கார்த்தியாயனி பட்டநாத், ராதா முண்டு பாலத்தில், குட்டிமாலு செருக்குட்டியில், பேபி செருமண்ணில், சந்திரிகா துடுசேரி, சோபா குருளில் ஆகியோருக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தாலும் துப்புரவு பணியைத் தொடர்ந்து செய்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு!

பரிசு பெற்ற பெண் ஒருவர் பேசுகையில், " என்னால் இதை நம்ப முடியவில்லை. என் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை. இது எங்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசு. நாங்கள் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துச் சமாளிக்க முடியாமல் தவித்து வந்தோம். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காகச் சேகரிக்கும் அர்த்தமுள்ள பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு லாட்டரி அடித்தாலும், இந்த வேலையைத் தொடர்ந்து செய்வோம்" எனக்கூறினார்.

பாலக்காட்டைச் சேர்ந்த ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்பட்ட அந்த லாட்டரியை மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குட்டிப்புரம் பகுதி விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து அந்த பெண்கள் வாங்கியுள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த 10 கோடி பரிசில் வரி மற்றும் ஏஜென்சி கமிஷன்போக ரூபாய் 6.3 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பர் பரிசு பெற்ற ஹரித கர்ம சேனா உறுப்பினர்களான அந்த பெண்களுக்கு, பரப்பனங்காடி நகராட்சி தலைவர் உஸ்மான் அம்மரம்பத் தலைமையில், பொதுமக்கள் உட்படப் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அந்த டிக்கெட்டை பெண்கள் அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒப்படைத்துள்ளனர். வருடம் தோறும் கேரள லாட்டரியில் இதுபோன்று பலர் அதிர்ஷடசாலிகளாக கண்டெடுக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மன்சூன் பம்பர் லாட்டரியில் துப்புரவுப் பணி தொழிலாளர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இடம் பெற்றுள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"ராகுலுக்கு பெண் தேடுங்கள்" விவசாய பெண்களிடம் சோனியா காந்தி... ராகுல் கொடுத்த ஸ்பெஷல் விருந்து!

ABOUT THE AUTHOR

...view details