தமிழ்நாடு

tamil nadu

ரோல்ஸ் ராய்ஸின் முதல் சூப்பர் சொகுசு எலக்ட்ரிக் கார் அறிமுகம்..!

By

Published : Oct 20, 2022, 5:12 PM IST

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் சூப்பர் சொகுசு எலக்ட்ரிக் வாகனத்தை "ஸ்பெக்டர்" என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

ஹைதராபாத்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் சூப்பர் சொகுசு எலக்ட்ரிக் வாகனத்தை "ஸ்பெக்டர்" என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பாளர்கள், நல்ல எதிர்காலத்திற்கேற்ற வடிவமைப்பைக் கொண்ட வாகனத்தின் படத்தை வெளியிட்டனர். இந்த வாகனம் 2.5 மில்லியன் கிலோமீட்டர் ஓட்டப்பட்டு மிகவும் கடினமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனை பணிகள் 2023ம் ஆண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் டெலிவரிகள் தொடங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிறுவனம் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை, ஆனால் ஊகங்களின்படி இது ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். ரோல்ஸ் ராய்ஸின் கூற்றுப்படி, ஸ்பெக்டர் ஒரு 'அல்ட்ரா லக்ஸரி எலக்ட்ரிக் சூப்பர் கூபே' மற்றும் இது ஒரு சிறந்த எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது.

ரோல் ராய்சின் சிக்னேச்சர் கிரில்களுடன் ஸ்பெக்டர் அகலமான ஸ்பிலிட் ஹெட்லைட்டை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளில் ரோல்ஸ் ராய்ஸில் முதல் முறையாக இது 23 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது. ஸ்பெக்டர் 320 மைல்கள்/520 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் 430kW பவர்டிரெய்னில் இருந்து 900Nm டார்க் வழங்கும் மற்றும் 0-60mph வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் (0-100km/h/h 4.5 வினாடிகளில்) அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மற்ற ரோல் ராய்ஸைப் போலவே, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப எல்லையற்ற உட்புற வடிவமைப்பு வசதிகள் கொண்டிருக்கும். இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது துவங்கியுள்ளது. டெலிவரி 2023இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒரு இளைஞர் கைது - என்ஐஏ அதிரடி

ABOUT THE AUTHOR

...view details