தமிழ்நாடு

tamil nadu

சுற்றுலா வாகனம் மீது லாரி மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

By

Published : May 29, 2022, 7:35 PM IST

சுற்றுலா வாகனம் மீது லாரி மோதிய கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

accident-
accident-

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஹ்ரைச்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுலா வாகனத்தின் ஓட்டுநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பிறகு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம் கர்நாடகாவிலிருந்து 16 பேருடன், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு!

ABOUT THE AUTHOR

...view details