தமிழ்நாடு

tamil nadu

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் வீடு தகர்ப்பு

By

Published : Sep 21, 2022, 7:03 AM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியின் வீடு தகர்க்கப்பட்டது.

கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் வீடு தகர்ப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் வீடு தகர்ப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அர்ஜூ மல்லிக் என்பவர், ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த சூழலில் சிறுமியை சமுதாய காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே ஒரு பண்டிட் இருந்துள்ளார்.

அப்போது தன்னை திருமணம் செய்யுமாறு அர்ஜூ சிறுமியை வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து பண்டிட் முன்னிலையில் அர்ஜூ சிறுமியை கட்டாயத் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து ஐந்து பேர் கொண்ட கும்பலுக்கு அர்ஜூ, அச்சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

மேலும் இதுதொடர்பான வீடியோக்களை எடுத்து, சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி அர்ஜூ, பண்டிட் உள்பட ஐந்து பேர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அர்ஜூவின் வீடு தகர்க்கப்பட்டது. அதேநேரம் அர்ஜூ தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குளியல் வீடியோ வழக்கு - காதலன் வற்புறுத்தியதால் மாணவி வீடியோ எடுத்தார் - விசாரணையில் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details