தமிழ்நாடு

tamil nadu

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு கருவிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு!

By

Published : Aug 16, 2022, 9:38 PM IST

"மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு கருவிகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

Rajnath
Rajnath

டெல்லி: "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு தேவையான நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பு சாதனம், ஏகே- 203 ரக துப்பாக்கிகள், நவீன தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், அதிநவீன பீரங்கி உள்ளிட்ட பல்வேறு நவீன பாதுகாப்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிநவீன சாதனங்களை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த அதிநவீன பாதுகாப்பு கருவிகள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்றும், எதிர்காலத்தில் ராணுவத்திற்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பானையில் நீர் அருந்தியமைக்கு மாணவன் கொல்லப்பட்ட விவகாரம்... கடும்நடவடிக்கை எடுக்க என்சிபிசிஆர் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details