தமிழ்நாடு

tamil nadu

சிறுத்தை தாக்கி தந்தை, மகன் படுகாயம் - அடித்துக் கொன்ற கிராம மக்கள்

By

Published : Jan 7, 2023, 9:38 AM IST

விவசாய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த தந்தை, மகனை சிறுத்தை கொடூரமாக தாக்கியதில் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

பன்ஸ்வாரா:ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப். இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது வயல்வெளியில் திடீரென நுழைந்த சிறுத்தை, திலீப் மற்றும் அவரது தந்தையை கொடூரமாக தாக்கியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள், சிறுத்தையை விரட்டி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கிராம மக்கள் வயல் வெளியில் பதுங்கி இருந்த சிறுத்தையை கம்பு, கட்டையால் அடித்து கொன்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், இறந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

முதல்கட்ட விசாரணையில், சிறுத்தைக்கு கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், வயல்வெளியை விட்டு நகர முடியாமல் பதுங்கி இருந்ததாகவும், அந்த நேரத்தில் கிராம மக்கள் கம்பு, கட்டைகளை கொண்டு தாக்கி கொன்றதும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு இதேபோல் மாடு ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி - மேற்கு வங்க அரசு அதிரடி திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details