தமிழ்நாடு

tamil nadu

பாலிவுட் நடிகர் ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

By

Published : Jul 8, 2022, 1:01 PM IST

1996ஆம் ஆண்டு தேர்தல் அலுவலரைத் தாக்கிய வழக்கில் பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான ராஜ் பப்பருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலிவுட் நடிகர் ராஜ் பப்பருக்கு
பாலிவுட் நடிகர் ராஜ் பப்பருக்கு

லக்னோ (உத்தரப் பிரதேசம்): பாலிவுட் நடிகர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ் பப்பர் 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தேர்தல் அலுவலரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் லக்னோ நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1996ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராஜ் பப்பர் சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோ தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, பப்பர் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்து தேர்தல் அலுவலரைத் தாக்கியதாகவும், அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், செப்டம்பர் 23, 1996 அன்று பப்பருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை லக்னோ எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ராஜ் பப்பரின் குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: தலைமறைவாகியுள்ள ரோஹித் ரஞ்சனுக்கு 7 நாட்கள் கெடு - காவல்துறை நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details