தமிழ்நாடு

tamil nadu

ஒரே காகிதத்தில் 1330 திருக்குறள் எழுதி புதுச்சேரி மாணவி சாதனை!

By

Published : Oct 10, 2022, 7:19 AM IST

தமிழ் இதிகாச காப்பியங்களை அனைவரும் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவி ஒருவர் 15 X 42 செ.மீ அளவுள்ள காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளை எழுதி, உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ஒரே காகிதத்தில் 1330 திருக்குறள் எழுதி புதுச்சேரி மாணவி சாதனை...!
ஒரே காகிதத்தில் 1330 திருக்குறள் எழுதி புதுச்சேரி மாணவி சாதனை...!

புதுச்சேரி:திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களைப் படித்து தெரிந்து கொள்ள இன்றைய தலைமுறையினரிடையே ஆர்வம் குறைந்துள்ளது.

இந்நிலையில், அனைவரும் காப்பியங்களையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்லூரி மாணவி கஜலட்சுமி லென்சைக் கொண்டு படித்து தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் 1330 திருக்குறளை எழுதி சாதனைப் படைத்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 15 cm X 42 செ.மீ அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் கஜலட்சுமி எழுதி உலக சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து, உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

ஒரே காகிதத்தில் 1330 திருக்குறள் எழுதி புதுச்சேரி மாணவி சாதனை!

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 200 கிலோ பிளம் கேக் தயாரிப்பு

ABOUT THE AUTHOR

...view details