தமிழ்நாடு

tamil nadu

"கரோனா மூன்றாம் அலையை சந்திக்க தயாராக இருக்கிறோம்"- தமிழிசை சௌந்தரராஜன்

By

Published : Jul 3, 2021, 4:50 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

pudhucherry lieutenant governor Tamilisai Soundarajan
pudhucherry lieutenant governor Tamilisai Soundarajan

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”சிறு வயதில் இருந்தே திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயில் எனக்கு பிடித்தமான கோயில். இங்கு வந்து சாமி தரிசனம் செய்தால், நான் சக்தி பெற்று செல்வேன். தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு வர முடியவில்லை. எப்போது கோயில் திறக்கப்படும் என காத்துக்கொண்டிருந்தேன்.

ஊரடங்கில் கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சாமி தரிசனம் செய்தேன். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளாக கூறுகிறேன் கோயில் நமக்காக திறக்கப்பட்டுள்ளது. கடவுள் நமக்கு அருள் புரிவார். ஆனால் நீங்கள் பாதுகாப்பு கருதி கையில் சானிடைசர் போட்டுக்கொள்ள வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். சிலர் கோயிலுக்குள் வரும்போது முகக்கவசத்தை கழற்றிகொள்கின்றனர். அப்படி இருக்கக்கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கரோனா முற்றிலும் நீங்கி எல்லா சிறப்பு பூஜைகளும் நடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வர வேண்டும் என்பதே எனது ஆசை. புதுச்சேரியில் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குழந்தைகளை தவிர்த்து பார்த்தால் 45 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். மேலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கரோனா மூன்றாவது அலையை சந்திக்க தயாராக உள்ளோம். அதற்காக குழந்தைகள் வார்டுகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்ட்டிலேட்டர் படுக்கைகள் தயாராக உள்ளன.

தற்போது இந்தப் படுக்கைகள் காலியாக உள்ளன. இது எப்போதும் காலியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details