தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம்.. ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்!

By

Published : Nov 14, 2022, 2:13 PM IST

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, உணவு, எரிசக்தி, பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டெல்லி:1999ஆம் ஆண்டு ஜி20 அமைப்பு தொடங்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, பிரேசில், கனடா, துருக்கி உள்ளிட்ட 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக இதில் அங்கம் வகிக்கின்றன.

நடப்பாண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தோனேஷியா வகிக்கிறது. 17-வது ஜி20 உச்சி மாநாடு நாளை (நவ.15) மற்றும் நாளை மறுநாள் (நவ.16) இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ரஷ்ய அதிபர் ஜி20 மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அவருக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று பிற்பகல் இந்தோனேஷியா புறப்படும் பிரதமர் மோடி, நாளை ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், ”மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், குறிப்பாக உலக வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச் சூழல், சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் குறித்து பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 15 ஆம் தேதி பாலியில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் சாதனைகள் மற்றும் உலகளாவிய சவால்களை கூட்டாக சமாளிக்க இந்தியா முன்னெடுத்த அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகள் குறித்து ஜி20 மாநாட்டில் பேச உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டின் இறுதி நாளில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடூடு-விடம்(joko widodo) இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.

மேலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளை ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார். இந்தியாவின் G20 தலைமையானது ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளை கொண்டு இருக்கும் என்றும், சமமான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தின் செய்தியை அடிக்கோடிட்டு காட்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் கொடி: விமான வடிவ பலூன் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details