தமிழ்நாடு

tamil nadu

தமிழ் கலாசாரம் ஆதியும் அந்தமும் அற்ற நிலையாக விளங்குகிறது - பிரதமர் மோடி!

By

Published : Apr 14, 2023, 8:26 AM IST

இந்திய சுதந்திரத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது என்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய மறுசீரமைப்பில் தமிழ் மக்களின் பங்களிப்பு நாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றதாக பிரதமர் மோடி கூறினார்.

Modi
Modi

டெல்லி :தமிழ் கலாசாரம் மற்றும் தமிழர்கள் ஆதி அந்தம் அற்ற அளவாக உலகளவில் பரவி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் வீட்டில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடபட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மக்கள் தொடக்கம் முடிவு என்ற நிலைக்கு அப்பாற்ப்பட்டு உலகம் முழுவதும் பரவி இருப்பதாக கூறினார். சென்னை முதல் கலிபோர்னியா, மதுரை முதல் மெல்போர்ன் வரை என தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை சுமந்து செல்லும் மக்களை காண முடிகிறதாக பிரதமர் மோடி கூறினார்.

எடுத்துக்காட்டாக தமிழர்களின் பொங்கல் அல்லது புத்தாண்டு பண்டிகை உலகளவில் கொண்டாடப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பழமையிலும் புதுமை காணும் பண்டிகையாக தமிழர்களின் புத்தாண்டு கொண்டாப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகின் பழமையான மொழி தமிழ் என்றும் ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைபடுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் இலக்கிய உலகளவில் போற்றப்படுவதாகவும், தமிழ் மற்றும் தமிழர்களின் பண்புகளை கூறும் வகையிலான வரலாற்று சான்றுகளை தமிழ் சினிமா மற்றும் கலைத் துறை வழங்கி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்த போது தனது தொகுதியில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்ந்ததாக மோடி குறிப்பிட்டார்.

குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர்கள் தான் தன்னுடைய வாக்காளர்களாக இருந்து எம்.எல்.ஏ.வாகவும், முதலமைச்சராகவும் தான்னை ஆக்கியதாக பிரதமர் கூறினார். தமிழர்களுடன் தான் செலவிட்ட நேரத்தை தன்னால் மறக்கவே முடியாது என குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறு சீரமைப்பில் தமிழ் மக்களின் பங்களிப்பு நாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட துறைகளின் தமிழர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஒரு குடிமகனாக நாட்டின் பாரம்பரியத்தை மேம்படுத்துவது நமது கடைமை எனக் கூறிய பிரதமர் மோடி அந்த சேவையில் ஈடுபட மக்கள் தனக்கு வாய்ப்பு அளித்து உள்ளதாக கூறினார். ஐநா சபையில் தமிழ் மொழி குறித்து மேற்கொள் காட்டி தான் பேசிய போது உலகளாவிய தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவை தேசமாக வடிவமைத்ததில் தமிழ் மொழியின் பங்கு அளவற்றது என பிரதமர் குறிப்பிட்டார். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100 முதல் 1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை குறிப்பிட்டு காட்டிய பிரதமர் மோடி, நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகளை அந்த கல்வெட்டுகள் வெளிக் கொணர்வதாக கூறினார்.

காஞ்சிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அந்த கால கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு எடுத்துக்காட்டுவதாகவும் ஒரு பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை, ஒரு உறுப்பினரை எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவாக பிரதிபலிப்பதாக கூறினார்.

அண்மையில் காசி தமிழ் சங்கமம் விழா வெற்றிகரமாக நிறைவுப பெற்றதாகவும் புதுமை பன்முகத்தன்மை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அந்த விழா கொண்டாடப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். காசி தமிழ் சங்கமம் விழா மகத்தான வெற்றியை கண்டு உள்ளதாகவும் காசி விஸ்வாநாத்தின் அறங்காலராக இருந்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பது அன்பையும் ஒரே பாரதம் சிறந்த பாரதம் என்ற உணர்வையும் பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமல் காசி மக்களின் வாழ்வு முழுமை அடையாது என தான் நம்புவதாகவும் அதேபோல் காசி இல்லாமல் தமிழ் மக்களின் வாழ்வு முழுமை அடையாது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி அங்கு யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் தான் என பெருமிதம் கொண்டார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உதவிகளுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்ததாக கூறிய பிரதமர் மோடி, தமது தலைமையிலான அரசு அங்குள்ள தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்ததாக தெரிவித்தார். முன்னதாக விழாவுக்கு வந்த பிரதமர் மோடி தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கதர் வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து வந்தார்.

இந்த விழாவில் ஆளுநர்கள் தமிழிசை சவுந்தரராஜன், சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :Ambedkar Jayanthi : தெலங்கானாவில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு - பிரம்மாண்ட விழா!

ABOUT THE AUTHOR

...view details