தமிழ்நாடு

tamil nadu

பிபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

By

Published : Dec 8, 2021, 7:26 PM IST

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிக்காப்படர் விபத்தில் சிக்கி இன்று மரணமடைந்தார். இவரின் மறைவை இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பிபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில், " தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியை தருகிறது. நாடு தனது வீரப் புதல்வர்களை இழந்துள்ளது. நாற்பது ஆண்டு காலம் தேசத்திற்காக தன்னலமற்ற சேவையை அவர் தந்துள்ளார்.

இந்த துயரமான வேளையில் நாட்டு மக்கள் அனைவருடன் நானும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்" என்றார்.

பிரதமர் மோடி இரங்கல்

தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ஏனைய ராணுவ வீரர்தள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்த இவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தளபதி பிபின் ராவத் ஒரு தலைசிறந்த வீரர். உண்மையான தேசபக்தர், நாட்டின் ராணுவ கட்டமைப்பை நவீனமாக்க பெரும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். வியூகம் வகுக்கும் பணிகளில் அவரது சிந்தனை அபாரமானது. அவரது மரணம் எனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது.

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக ராவத் பாதுகாப்புத்துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். தனது உயரிய அனுபவங்களை ராணுவத் துறைக்கு அவர் கொடுத்துள்ளார். அவரின் தலைசிறந்த சேவை இந்தியா என்றும் மறவாது." இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:RIP BipinRawat: முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details