தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரி மத்திய பல்கலையில் பிபிசியின் ஆவணப்படம்; இருதரப்பு மாணவர்களிடையே மோதல்!

By

Published : Jan 26, 2023, 11:38 AM IST

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவண படத்தை பார்த்த மணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்
இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்

இரு தரப்பு மாணவர்களிடையே மோதல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி பல்கலைக்கழகம்(pondicherry central university)இயங்கி வருகிறது. இந்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவண படத்தை பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தனர்.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொதுவெளியில் திரையிடக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில் விடுதி அறைகளில் திரையிடப்படும் என அறிவித்தனர். அதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'India the Modi Question' என்ற ஆவணப் படத்தை பல்கலைக்கழகம் வளாகத்தில் பார்த்தனர்.

இதே போன்று கேரளா மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாஹே பிராந்தியத்திலும் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு(DYFI) சார்பில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். அதை அவர்களது பேஸ்புக் பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பாக இணைந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் பிபிசி வெளியிட்ட மோடி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களில் ஒருவர் கூறுகையில், “இந்திய மாணவர் சங்கம் சார்பில் பிபிசி வெளியிட்ட மோதி குறித்த ஆவணப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கவில்லை. மேலும் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் பல்கலைக்கழகம் முழுவதும் மின்சாரம் மற்றும் வைஃபை(wifi) இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்டர் கேட் அருகே சுமார் 300 மாணவர்கள் இணைந்து எங்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பிபிசியின் ஆவணப்படத்தை பார்த்தோம்.

அப்போது அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (ABVP) அமைப்பை சேர்ந்த 10 பேர் எங்களுக்கு எதிராக "ஜெய் ஸ்ரீ ராம், மோடி மோடி சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியில் எங்களை பார்த்து மிரட்டி கத்தினர். இதனால் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில் பல்கலைக்கழக தனியார் காவலர்கள் பாதுகாத்தனர். தற்போது மின் இணைப்பு வந்துள்ளது. ஆனால் இணைய வசதி வரவில்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Union budget 2023: சில்லறை வியாபாரிகளின் எதிர்பார்ப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details