தமிழ்நாடு

tamil nadu

கரோனாவால் இந்தாண்டு களையிழந்த நோபல் பரிசு விழா!

By

Published : Dec 8, 2020, 4:43 PM IST

பெர்லின்: கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்தாண்டு நோபல் பரிசு விழா களையிழந்து காணப்படுகிறது.

நோபல் பரிசு
நோபல் பரிசு

அக்டோபர் மாதம் 2020ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. உடலியல் (physiology) மற்றும் மருத்துவத்திற்கான பரிசு ஹார்வி ஜே. ஆல்டர், மைக்கேல் ஹவுக்டனுக்கும்,"ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக சார்லஸ் எம். ரைஸூக்கும் வழங்கப்பட்டது.

அதே போல், இயற்பியலுக்கான பரிசு ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு பிளாக் ஹோல் குறித்து தெளிவான விவரித்தற்காக கௌரவிக்கப்பட்டது. வேதியியல் பரிசு இம்மானுவேல் சர்பென்டியருக்கும், சக்திவாய்ந்த மரபணு திருத்தும் கருவி கண்டுபிடிப்புக்காக ஜெனிபர் ஏ. டவுட்னாவுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், இந்தாண்டு கரோனா தொற்றின் காரணமாக நோபல் பரிசு விழாக்களின் ஆடம்பரமும், பிராமாண்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வேதியியலுக்கான 2020 நோபல் பரிசு வெற்றியாளரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இம்மானுவேல் சார்பென்டியருக்கு,பெர்லினில் உள்ள ஸ்வீடிஷ் தூதரிடமிருந்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எளிமையான முறையில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்தன.

ABOUT THE AUTHOR

...view details