தமிழ்நாடு

tamil nadu

ஐந்து நட்சத்திர விடுதி தரத்தில் காவல் நிலையம்!

By

Published : Nov 19, 2020, 12:13 PM IST

கேரளாவின் பேக்கல் காவல் நிலையம் ஐந்து நட்சத்திர விடுதியின் தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புகாரளிக்க வருபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது.

five star range police station, kasaragod bekal police station, பேக்கல் காவல் நிலையம், 5 star police station, காசர்கோடு காவல் நிலையம், kasaragod bekal kaaval nilaiyam
kasaragod bekal police station

காசர்கோடு (கேரளா): பேக்கல் காவல் நிலையம் ஐந்து நட்சத்திர விடுதியின் தரத்தில் ரூ.10 லட்சம் செலவிடப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான சொகுசு வசதிகளுடன் இந்த காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு - கன்ஹன்கட் மாநில நெடுஞ்சாலையின் த்ரிகுன்னத்து எனுமிடத்தில் பேக்கல் காவல் நிலையம் அமைந்துள்ளது.

உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியின் தோரணையில் இதன் உள்வேலைபாடுகள் அமைந்துள்ளது. சொகுசான இருக்கைகள், உயர்தர கழிப்பிட வசதிகள், வண்ண ஒளி விளக்குகள், புத்துணர்வு தரும் செடிகள் என அனைத்தும் உயர்தரத்தில் இங்கு அமைப்பட்டுள்ளது.

காசர்கோடு பேக்கல் காவல் நிலையம்

இங்கு புகார் தெரிவிக்க வருபவர்கள் எவ்வித இன்னல்களையும் சந்திக்கக்கூடாது, அவர்கள் மனதில் எவ்விதமான பதற்றத்தையும் உணரக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரியான வேலைபாடுகளை நிறுவியதாக காவல் நிலையத்தில் உயர் அலுவலர் நம்மிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details