தமிழ்நாடு

tamil nadu

பெண் காவலருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு - காவலர் மீது வழக்குப் பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 8:00 PM IST

Police raped lady police constable in Maharashtra: மகாராஷ்டிராவில் பெண் காவலருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்த சக காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

புனே (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள நகர காவல் படையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர், அங்கு உள்ள நகர காவலர் காலனியில் வசித்து வருகிறார். அதே காலனியில் தீபக் சீதாராம் மோகே என்பவரும் வசித்து வருகிறார். அதேநேரம், இருவரும் ஒரே காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில்தான் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி உள்ளனர்.

இந்த அறிமுகத்தின் பேரில், தீபக் மோகே பெண் காவலரின் வீட்டிற்கு இரவு உணவிற்காக அடிக்கடி செல்வதையும் வழக்கமாக கொண்டு உள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் பெண் காவலரின் குளிர்பானத்தில் குங்கி என்ற போதை மாத்திரையை தீபக் கலந்து உள்ளார். இதனையடுத்து, பெண் காவலர் வாந்தி எடுத்து உள்ளார். எனவே, அதற்காக மீண்டும் மாத்திரையை தீபக் கொடுத்து உள்ளார். இதனால், பெண் காவலர் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று உள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட தீபக், அப்பெண் காவலரை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். அது மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளார். இதனையடுத்து, இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் காண்பித்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி உள்ளார். அது மட்டுமல்லாமல், பெண் காவலரின் கணவரையும் கொலை செய்து விடுவதாக தீபக் மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலரை பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார். மேலும், பெண் காவலரின் வீட்டில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் தீபக் எடுத்து உள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக காதாக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

அந்தப் புகாரில், தன்னை கடந்த 2020 முதல் நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1 வரை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், காவலர் தீபம் மோகே மீது காதாக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இவர் தற்போது மார்க்கெட் யார்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடும் காரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்புணர்வு - உ.பி.யில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details