தமிழ்நாடு

tamil nadu

மசூதியில் அனுமான் ஸ்லோகம் : இந்து அமைப்பு அறிவிப்பு.. பலத்த பாதுகாப்பு!

By

Published : Dec 6, 2022, 11:46 AM IST

உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதியில் ஒன்றில் இன்று அனுமன் ஸ்லோகம் ஒலிக்கப்படும் என்ற இந்து அமைப்பின் அறிவிப்பை அடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உ.பி. மசூதியில் அனுமான் ஸ்லோகம் ஒலிக்கப்படும்: இந்து அமைப்பு அறிவிப்பு.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!
உ.பி. மசூதியில் அனுமான் ஸ்லோகம் ஒலிக்கப்படும்: இந்து அமைப்பு அறிவிப்பு.. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மதுரா (உத்தரபிரதேசம்): உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இக்தா மசூதியில் இன்று (டிச.6) அனுமான் ஸ்லோகம் ஒலிக்கப்படும் என அகில இந்திய இந்து மகாசபா அறிவித்தது.

இதனையடுத்து ஸ்ரீகிருஷ்ணா நகரின் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு எஸ்பிக்கள், 15 சிஓக்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 150 சப் இன்ஸ்பெக்டர்கள், 400 கான்ஸ்டெபிள்கள் மற்றும் மாநில புலனாய்வு துறையினர் உள்பட 1,200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

ABOUT THE AUTHOR

...view details