தமிழ்நாடு

tamil nadu

வெளிநாடு தப்பிச் செல்ல முன்ற முன்னாள் வங்கி இயக்குனர் எல்லையில் கைது

By

Published : Feb 4, 2022, 1:12 PM IST

பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவரும் தல்ஜித் சிங் பால் இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.

PMC Bank scam
PMC Bank scam

மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.6,700 கோடி மதிப்பில் மோசடி நடைபெற்றது 2019ஆம் ஆண்டு செப்டெம்பரில் தெரியவந்தது. வங்கி இயக்குனர் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள், ஆடிட்டர், பிரமோட்டர்கள் என பலரும் இணைந்தது இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த மோசடி புகாரில் இதுவரை ஏழு பேர் கைதாகி இருந்தனர். இந்த மோசடி புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரான வங்கியின் இயக்குனர் பொறுப்பிலிருந்த தல்ஜித் சிங் பால் தப்பி செல்ல வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இந்த தகவல் காவல்துறைக்கு கசியவே, இந்திய-நேபாள எல்லையில் வைத்து தல்ஜித்தை மும்பை பொருளாதார தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

பொருளாதார குற்றவாளிகளான பெரும் பணக்காரர்கள் நீர்வ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு தல்ஜித் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. நேபாளத்திலிருந்து விமான மார்க்கமாக கனடா தப்பி செல்ல முயன்றுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details