தமிழ்நாடு

tamil nadu

நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் விழா; கொல்கத்தா செல்கிறார் மோடி

By

Published : Jan 23, 2021, 9:31 AM IST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) கொல்கத்தா செல்கிறார்.

நேதாஜி
Netaji

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைப் போரின் முக்கிய முகமாகவும், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவருமான நேதாஜியின் பிறந்தநாளை பராக்ரம் திவஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க நேதாஜி பிறந்த மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அங்கு நேதாஜி பவனை பார்வையிடும் பிரதமர், நேதாஜி நினைவு அருங்காட்சியகத்தை திறந்துவைக்கிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில அரசும் நேதாஜி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி தேஷ்நாயக் தினமாக கொண்டாடப்போவதாக அறிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கு 6 கி.மீ. பேரணி நடத்துகிறார். அத்துடன் நேதாஜி பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த போட்டாப்போட்டி நேதாஜி பிறந்தநாளிலும் தொடர்கிறது.

இதையும் படிங்க:பிரேசிலுக்கு பறந்த இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள்

ABOUT THE AUTHOR

...view details