தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

By

Published : Aug 16, 2021, 5:59 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அவரது இல்லத்தில் இன்று சிறப்பு விருந்து அளித்தார்.

ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் விருந்து
ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் விருந்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, தொடங்கிய 32ஆவது ஒலிம்பிக் ஆகஸ்ட் 8ஆம் தேதி கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நிறைவுபெற்றன.

206 நாடுகளிலிருந்து 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்று, உலகளவில் பதக்கப்பட்டியலில் 48ஆவது இடத்தைப் பிடித்தது.

குறிப்பாக இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளது. தடகளப்போட்டியில் 120 ஆண்டுகளுக்குப்பின், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 41 ஆண்டுகளுக்குப் பின் ஆடவர் ஹாக்கி அணி போட்டியில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

வீரர்களுக்கு வரவேற்பு

39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தையும், ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஜப்பான் முறையே மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களது ஊர்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் மோடி பாராட்டு

இந்நிலையில் நேற்று(ஆக.15) 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை வெகுவாகப் பாராட்டினார்.

அதில், "ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள். இவர்கள் நமது இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரையும் ஊக்குவித்துள்ளனர்" என்று பேசினார்.

பிரதமர் இல்லத்தில் விருந்து

இதையடுத்து, இன்று (ஆக.16) பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் தமது இல்லத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த மீராபாய் சானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details