தமிழ்நாடு

tamil nadu

இந்து மதத்தை அவமதித்ததாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்

By

Published : Jul 5, 2022, 12:26 PM IST

Updated : Jul 6, 2022, 11:13 AM IST

ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலையின் காளி பட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, அவர் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

ஆவணப்பட  இயக்குநர் மணிமேகலை மீது டெல்லி வழக்கறிஞர்  புகார்
ஆவணப்பட இயக்குநர் மணிமேகலை மீது டெல்லி வழக்கறிஞர் புகார்

டெல்லி:பிரபல ஆவணப்பட இயக்குநரான லீணா மணிமேலையின் ஆவணப்படங்களில் பாலியல், சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். இவரது ‘மாடத்தி’, ‘செங்கல்’ ஆகிய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவை. அதோடு ஈழப்போராட்டங்கள் குறித்தும் சில ஆவணப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இயக்கிய காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அதில், ’காளி’ போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் LGBT கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் புகார்:டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிண்டால் என்பவர் காவல்நிலையத்தில் லீனா மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "இயக்குநர் லீனா, காளி தேவியை புகைபிடிப்பதை போல் காட்டி மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார். இதுமிகவும் ஆட்சேபனைக்குரியது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்து தெய்வம் குறித்த இத்தகைய இழிவான படம் மிகவும் மூர்க்கத்தனமானது. கொடூரமானது. இந்து மதத்தின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்துகிறது. ஆகவே இதனை வெளியிட்ட லீனாவை கைது செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் லீனா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’காளி’ வாயில் சிகரெட்- சர்ச்சை கிளப்பும் லீனா மணிமேகலையின் ஆவணப்பட போஸ்டர்

Last Updated : Jul 6, 2022, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details