தமிழ்நாடு

tamil nadu

World Physiotherapy Day: பார்கின்சன் முதல் உடல்வலி வரை.. மருந்தில்லா மருத்துவமாகும் பிசியோதெரபி...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 4:03 PM IST

Updated : Sep 8, 2023, 4:40 PM IST

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, "உலக பிசியோதெரபி தினம்" கொண்டாடப்படுகிறது. மருந்தில்லா மருத்துவமான பிசியோதெரபி சிக்கலான நோய்களான பார்க்கின்சன் முதல் சாதாரண உடல்வலி வரை அனைத்திற்கும் மருந்தாக அமைவது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

physiotheraphy-day-special-article
உலக பிசியோதெரபி தினம்

ஹைதராபாத்:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, "உலக பிசியோதெரபி தினம்" கொண்டாடப்படுகிறது. பிசியோதெரபி என்றும் அழைக்கப்படும் ’பிசிக்கல் தெரபி’என்பது உடல் சார்ந்த நோய் அல்லது மூட்டு வலி, தசை வலி, பக்கவாதம், சிதைவு போன்ற நிலைமைகள் உள்ள மக்களுக்கு வழங்கபட வேண்டிய ஒரு முக்கிய சிகிச்சையாகும்.இது பிசியோதெரபிஸ்ட்டால் நடத்தப்படுகிறது.

தினமும் பிசியோதெரபி எடுத்துகொள்ளும் மூலம் நேயாளிகளை சுறுசுறுப்பாக வைத்து இது உதவுகிறது.மேலும் மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கு பின் அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்.இது ஊசி, மருந்துகளை பயன்படுத்தாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் பிசியோதெரபி உதவுகிறது. இன்றைய நவீன காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பிசியோதெரபி மையங்கள் முளைத்துவிட்டன.

World Physiotherapy Day

நவீன பிசியோதெரபி சிகிச்சை முறைகள் குறித்து கோவை கேஜி பிசியோதெரபி கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஹரிஹரசுதன் கூறுகையில், "பிசியோதெரபி என்பது நோயாளிகளின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை மேம்படுத்தும் ஒரு உன்னதமான தொழிலாகும்.இதில் நரம்பியல் பிசியோதெரபி, எலும்பியல் பிசியோதெரபி, கார்டியோ-சுவாச பிசியோதெரபி, மகப்பேறியல் பிசியோதெரபி மற்றும் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி உள்ளிட்ட பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன" என்றார்.

மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பது போல, நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பது பிசியோதெரபி ஆகும், பக்கவாதம், பார்கின்சன் நோய், எலும்பு முறிவுகள், மூட்டுவலி, சிஓபிடி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது.அதேபோல் நேயாளிகளின் தன்மையை பெறுத்து அவர்களுக்கு ஏற்றாற் போல் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை பரிந்துரைக்கும் உரிமை பிசியோதெரபிஸ்ட்க்கு மட்டுமே உள்ளது.

ஒரு தனிநபருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டால், முதலில் நோயாளியை உடல்ரீதியாக மதிப்பீடு செய்து,அவர்களின் பிரச்சனையைக் கண்டறிவோம்,பின்பு அந்த நோயாளிக்கு எந்த உடற்பயிற்சி தேவையோ அது நாள் வாரியாக தொகுத்து வழங்கப்படும்.மேலும் பயிற்சிகளைச் செய்யும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன என்பதையும், ஒவ்வொரு உடற்பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் சரியான ஓய்வு இடைவெளியில் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.சரியான பயிற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் , நோயாளிகள் விரைவில் குணமடைந்து , ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என தெரிவித்தார்.

இது குறித்து கேஜி பிசியோதெரபி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் பிசியோதெரபிஸ்ட் பவித்ரா கூறுகையில் பிசியோதெரபி பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தாலும், பெண்களின் ஆரோக்கியத்தில் பிசியோதெரபியின் நன்மைகளை பலரும் அறிவதில்லை, இதனால் உடல் பருமன், தொழில் சார்ந்த மன அழுத்தம், மாதவிடாய்க்கு முன்பும்,பின்பும் என பல உடல்நலப் பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

இதற்கு குறிபிட்ட பயிற்சிகள் மூலம் பிசியோதெரபிஸ்ட்கள் அவர்களுக்கு உதவ முடியும். அவர்களின் உடல் செயல்பாடு அளவை மேம்படுத்துவதன் மூலம், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தலாம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மேலும் ஒவ்வொரு நிலையின் அறிகுறிகளையும் குறைக்கலாம், இது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.என தெரிவித்தார்.

சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம் சரிதான் ஆனால், பிசியோதெரபி படிப்பின் எதிர்காலம் குறித்து அறிவதற்காக கேஜி பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் மருத்துவர். மனோஜ் ஆபிரகாமை அணுகினோம், பிசியோதெரபி கல்வி என்பது இளங்கலை,முதுகலை போன்ற பட்டப்படிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு துறையாகும். இது உடல்செயல்முறை பயிற்சியுடன் சிகிச்சையும் வழங்கும் படிப்பாகும். இன்றை நவீன காலத்தில் நேயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல மேம்பட்ட நுட்பங்கள் உள்ளன, மேலும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது. பலரும் தனி கிளினிக்குகளையும் மறுவாழ்வு மையங்கள் உருவாகி வருகின்றனர். இது வரும் ஆண்டுகளில் பிசியோதெரபி துறையில் மேலும் வளர்ச்சியை அடையும் என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரையிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. அலோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைகளை வழங்குகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில் பிசியோதெரபிஸ்ட்டுகளை தன்னிச்சையாக சிகிச்சைக்காக அணுக முடியும். மருந்துகள் இல்லாததால் பக்கவிளைவுகளுக்கான வாய்ப்புகளும் குறைவு என்பதால் பிசியோதெரபி சிகிச்சையை நாடுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தே வருகிறது.

இதையும் படிங்க :புத்தக வாசிப்பு விழிப்புணர்வு: 3 ஆயிரம் மாணவிகள் ஒன்று திரண்டு உலக சாதனை படைப்பு!

Last Updated :Sep 8, 2023, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details