தமிழ்நாடு

tamil nadu

பயங்கரவாத செயல்களுக்கு PFI ஆள் திரட்டியதாக குற்றச்சாட்டு - NIA அறிக்கை

By

Published : Dec 20, 2022, 9:51 PM IST

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஒரு பிரிவு பயங்கரவாத செயல்களில் ஈடுபட பல்வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை திரட்டியதாக நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

எர்ணாகுளம்: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, சதித் திட்டம் தீட்டியது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) அமைப்பை மத்திய அரசு தடை செய்தது.

மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், பி.எப்.ஐ. தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை மேற்கொண்டு விசாரிக்க அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. முறையிட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், பி.எப்.ஐ. அமைப்பின் ஒரு ரகசிய பிரிவு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட இளைஞர்களை திரட்டியதாகவும், பல்வேறு சமூகங்களை சேர்ந்த இளைஞர்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கான பணிகளில் மற்ற பி.எப்.ஐ. அலுவலகங்களில் நடைபெற்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் பி.எப்.ஐ.க்கு தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருவதாகவும் என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் காவலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க:போலீசார் கலாசார காவலர்களாக மாறவேண்டாம் - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details