தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தானில் ரூ.300-ஐ கடந்த பெட்ரோல் விலை.. காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 11:37 AM IST

Updated : Sep 1, 2023, 1:35 PM IST

Pakistan petrol price: பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14.91 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 18.44 ரூபாயும், உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் இடைக்கால அரசு எரிபொருட்களான பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14.91 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 18.44 ரூபாயும், உயர்த்தப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தானின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் ஆங்கில மொழி செய்தித்தாள் நிறுவனம் ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் தற்போதைய எக்ஸ் பதிவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 14.91 ரூபாய் உயர்த்தி 305.36 ரூபாயாகவும், அதிவேக டீசல் (HSD - High Speed Diesel) டீசல் விலை லிட்டருக்கு 18.44 ரூபாய் உயர்த்தி 311.84 ரூபாயாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் மற்றும் லேசான டீசல் (Light Diesel) விலையில் எந்த மாற்றமும் குறிப்பிடவில்லை. பாகிஸ்தானின் இடைக்கால அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 20 ரூபாய் வரை உயர்த்தியது. அதனை அடுத்து தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நாளிதழின் படி, இந்த விலை உயர்வு தற்போது உள்ள வரி விகிதங்கள் இறக்குமதி சமநிலை விலைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு குறைந்து வருவது மற்றும் சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்தது. வங்கிகளுக்கு இடையேயான சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் 1.09 ரூபாய் சரிந்தது. அதனைத் தொடர்ந்து 305.34 ரூபாய் என்று வரலாறு காணாத அளவு முடிவடைந்தது. கேர்டேக்கர் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து ரூபாயின் மதிப்பு 4.6 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூபாயின் மதிப்பு 6.2 சதவீதம் வரை சரிந்தது என கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின் மூலம் அறியலாம். பாகிஸ்தானில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தானின் குறுகிய கால பணவீக்கம் 27.57 சதவீதம் உயர்ந்து உள்ளது. இருப்பினும் பணவீக்கம் முந்தைய வாரத்திலிருந்த 30.82 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.. சென்னையில் கேஸ் விலை என்ன?

Last Updated : Sep 1, 2023, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details