தமிழ்நாடு

tamil nadu

பீகாரில் உணவில் விஷம் கலப்பு.. 150 பேருக்கு உடல்நலக்குறைவு!

By

Published : Feb 8, 2023, 11:19 AM IST

பீகார் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஷரத்தாவிற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

பீகார்: கதிஹாரில் உணவில் விஷம் கலந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட விஷாரியா கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவிற்காக இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. பிப்.6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவருந்திய பிறகு வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து மேலும் பலருக்கும் உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதைத்தொடர்ந்து அக்கிராமத்தில் முகாமிட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பரிசோதித்ததில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தைக் கண்டறிந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அனைவரையும் ஹையர் சென்டர் கதிஹார் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்ட விருந்தில் இவ்வாறு விஷத்தை கலந்த சமூக விரோதிகளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மூவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிரானைட் கடத்தல்.. சந்திரபாபு நாயுடு எழுதிய அவசர கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details