தமிழ்நாடு

tamil nadu

பிரிவினை இன்னமும் வலிக்கிறது- மோகன் பகவத்!

By

Published : Oct 15, 2021, 12:37 PM IST

பிரிவினையின் வலியை இன்னமும் உணர்கிறோம்; பிரிவினையின் உண்மையான வரலாற்றை அறிந்து வருங்கால தலைமுறை ஒற்றுமையுடன் நடக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம்) தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

Mohan Bhagwat
Mohan Bhagwat

நாக்பூர் (மகாராஷ்டிரா): விஜய தசமி மற்றும் ஆர்எஸ்எஸ் நிறுவனத் தின கொண்டாட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடந்தன.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர், “பிரிவினைவாதத்தின் வலியை நாடு இன்னமும் உணர்கிறது. புதிய தலைமுறையினர் பிரிவினையின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாட்டின் பிரிவினையை நினைவுகூரும் மத்திய அரசின் அறிவிப்பையும் வரவேற்றார். பின்னர் அவர் பேசுகையில், “ஒற்றுமையுடன் இருக்க மீண்டும் பகைமையை நாம் தவிர்க்க வேண்டும். இளைஞர்கள் பக்க சார்பற்ற சமூகத்திற்காக விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். நம்மிடமிருந்து பிரிந்தவர்களை நாம் வரவேற்கிறோம்” என்றார்.

தொடர்ந்து சாவர்க்கர் மற்றும் யோகி அரவிந்த் ஆகியோரை நினைவுகூர்ந்த மோகன் பகவத், “சாவர்க்கர் கீதையை உபதேசித்தார். இந்த உலகமே ஒரே வாசுதேவ குடும்பம் என்றார். நாம் இதைப் பின்பற்றினால், உலகின் பிரச்சினைக்கும் இந்தியா தீர்வு காணும்.

உலகளவில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மரியாதைக்குரிய நிலை, நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் நம்புகின்றனர். அவர்கள் நாட்டின் மதம், கலாசாரம் மற்றும் மரபுகள் மீது நுண்ணிய மற்றும் கலாசார ரீதியிலான தாக்குதல்கள் நடத்துகின்றனர். அத்தகைய மக்கள் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து இரு வடகிழக்கில் இரு மாநில காவலர்கள் மோதிக்கொண்ட பிரச்சினை பற்றி பேசுகையில், “இரண்டு மாநிலங்களின் காவலர்கள் மோதிக்கொண்டதை நாம் பார்த்தோம். இது சிலருக்கு அரசியல் ஆதாயங்களை கொடுக்கலாம். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றே. நமக்குள் வேறுபாடு கூடாது. இந்தப் பரப்புரையை ஆட்சியில் இருப்பவர்கள் எடுத்து கூறாவிட்டால் நமக்குள் ஒற்றுமை எப்படி இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க : தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியா? கேள்வியெழுப்பும் சாவர்க்கர் பேரன்!

ABOUT THE AUTHOR

...view details