தமிழ்நாடு

tamil nadu

குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் புதிய மைல்கல்: நீர்வளத்துறை அமைச்சகம் தகவல்

By

Published : Mar 29, 2021, 6:32 PM IST

பிரதமர் மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மூன்றில் ஒரு பங்கு கிராமப்புற மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவிட்டதாக நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தில் புதிய மைல்கல்
Over 4 Cr rural homes get tap water connections

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் 7.24 கோடி பேருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்றில் ஒரு பங்கு கிராம குடியிருப்புவாசிகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டம் மூலம் இந்திய கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

தற்போது இத்திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறோம். இத்திட்டத்தில் தெலங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவினைத் தொடர்ந்து, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பை ஏற்படுத்தி கோவா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உதவியோடு 56 மாவட்டங்களில் 86 ஆயிரம் கிராமங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கியிருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'15 லட்சமா... 15 காசுகள்கூட போடாதவர் மோடி' - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details