தமிழ்நாடு

tamil nadu

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

By

Published : Nov 30, 2021, 1:18 PM IST

மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்ததை திரும்பப்பெற வலியுறுத்தி அவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

Rajya Sabha
Rajya Sabha

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளியின் போது அவையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அவையின் புனிதத்தை கெடுக்கும் விதமாக செயல்பட்டவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற முடியாது வெங்கையா நாயுடு உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவை நடவடிக்கையை புறக்கணித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்தது இன்று வெளிநடப்பு செய்தன.

மேலும், அவைத் தலைவர் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் எனக் கோரி தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஒமைக்ரான் பாதித்த ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி - இந்தியா உதவிக்கரம்

ABOUT THE AUTHOR

...view details