தமிழ்நாடு

tamil nadu

Omicron India cases: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

By

Published : Dec 4, 2021, 3:17 PM IST

Updated : Dec 4, 2021, 3:26 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Omicron India
Omicron India

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த 71 வயது நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் அன்மையில் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வந்துள்ளார். இதையடுத்து, இந்தியாவில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு மூன்றாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, தென்னாப்ரிக்காவிலிருந்து கர்நாடகா மாநிலம் திரும்பிய இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருந்து.

டெல்டா ரக கரோனாவை விட ஐந்து மடங்கு வீரியம் மிக்க ஒமைக்ரான் தொற்று 29 நாடுகளில் இதுவரை பரவியுள்ளது. எனினும், ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முககவசம், தனிநபர் இடைவேளை, சானிடைசர் பயன்பாடு போன்ற கோவிட் விதிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:IND vs NZ: ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்; அசத்திய அஜாஸ் படேல்

Last Updated : Dec 4, 2021, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details