தமிழ்நாடு

tamil nadu

குஜராத்தில் நவராத்திரி கர்பா நடனத்தில் பங்கேற்க இந்துக்கள் அல்லாத பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை!

By

Published : Sep 7, 2022, 10:18 PM IST

சூரத்தில் நவராத்திரி விழா மற்றும் கர்பா நடனத்தில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் கலந்து கொள்ள அனுமதி இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

non
non

சூரத்(குஜராத்):நவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. நவராத்திரி பண்டிகை வட மாநிலங்களில் அதிகளவு கொண்டாடப்படும்.

இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனம் முக்கியமான ஒன்று. துர்கா தேவியைப் போற்றிப்புகழும் பாடல்களை இசைத்து, குஜராத்தி நாட்டுப்புற நடனமான கர்பாவை ஆடுவார்கள். இம்மாத இறுதியில் நவராத்திரி தொடங்கவுள்ளதால், தற்போது குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கர்பா நடனப்பயிற்சியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சூரத்தில் இந்த ஆண்டு நவராத்திரி விழாவிலும், கர்பா நடனப்பயிற்சியிலும் இந்து அல்லாத பிற மதத்தினர் கலந்துகொள்ள அனுமதி இல்லை என கர்பா நடன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். நடனப் பயிற்சியில் பிற மதத்தினர் பங்கேற்கக்கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக விழாவில் கலந்து கொள்பவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லவ் ஜிகாத் நடக்காமல் தடுப்பதற்காகவே இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலம் சென்ற வண்டியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details