தமிழ்நாடு

tamil nadu

2023 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 9:25 PM IST

Nobel Prize in Physics awarded: 2023ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஜெர்மனியை சேர்ந்த பிரென்ச் க்ரஸ்ஸ், ஸ்வீடனை சேர்ந்த அன்னே எல்'ஹுல்லியர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

nobel-prize-in-physics-awarded-to-pierre-agostini-ferenc-krausz-anne-lhuillier
எலக்ட்ரான் டைனமிக்ஸ் ஆய்வு: பியர் அகோஸ்டினி, பிரென்ச் க்ரஸ்ஸ், அன்னே எல்'ஹுல்லியர் - 2023 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: 2023ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் வழங்குகின்றது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஜெர்மனியைச் சேர்ந்த பிரென்ச் க்ரஸ்ஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னே எல்'ஹுல்லியர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என மொத்தமாக ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

இதையும் படிங்க:எதிர்பாலினத்தவரிடம் பேச தயக்கமா? ஆரோக்கிமான உரையாடலுக்கு இதுதான் வழி

நோபல் பரிசு பெற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்குத் தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் 7.33 கோடி ரொக்கம் (மூன்று விஞ்ஞானிகளுக்கும் சேர்த்து) ஆகியவை வழங்கப்படுகின்றது. "ஒளியின் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்குவதற்கான வழியை நிரூபித்துள்ளனர், இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு அன்னே எல்'ஹுல்லியர் எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான இயற்பியல் ஆய்வுகளை மேற்கொண்டார். 2001ஆம் ஆண்டில் பியர் அகோஸ்டினி அதன் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டார். பிரென்ச் க்ரஸ்ஸ் இதே தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர்களின் கண்டுபிடிப்பு மருத்துவ நோயறிதல் போன்ற பல்வேறு மூலக்கூறுகளை அடையாளம் காணப் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:நாட்டின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்ட பீகார் அரசு!

கடந்த ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகளை பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பியர் அகோஸ்டினி (ஓஹியோ மாநில பல்கலைக்கழகம், கொலம்பஸ், அமெரிக்கா), பிரென்ச் க்ரஸ்ஸ்(மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாண்டம் ஆப்டிக்ஸ், கார்ச்சிங் மற்றும் லுட்விக்-மாக்சிமிலியன்ஸ்-யுனிவர்சிட்டட், ஜெர்மனி) அன்னே எல்'ஹுல்லியர் (லண்ட் பல்கலைக்கழகம், ஸ்வீடன்)ஆகிய மூன்று இயற்பியல் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:Cricket World Cup 2023: கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? மனம் திறந்த இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்!

ABOUT THE AUTHOR

...view details