தமிழ்நாடு

tamil nadu

"அமர்த்தியா சென் நலமாக உள்ளார்" - சமூக வலைதளத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நந்தனா சென்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 8:30 PM IST

Amartya Sen is alive:நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென் காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், தனது தந்தை நலமுடன் இருப்பதாக நந்தனா சென் நமது ஈடிவி பாரத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்:1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மறைந்துவிட்டதாக சில சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், தனது தந்தை தனது தந்தை நலமுடன் நலமாக இருப்பதாகவும் ஈடிவி பாரத்திற்கு அவரது மகள் நந்தனா சென் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரதிடம் பேசிய நந்தனா, "இது பொய்யான செய்தி, பாபா முற்றிலும் நலமாக இருக்கிறார்," என்று அவர் கூறினார். சிறிது நேரத்தில் நந்தனாவும் தனது தந்தையின் நலம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி, ஆனால் இது பொய்யான செய்தி: பாபா முற்றிலும் நலமாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம் - நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அரவணைப்பு எப்பொழுதும் போல் வலுவாக இருந்தது! அவர் வாரத்திற்கு 2 படிப்புகள் கற்பிக்கிறார். ஹார்வர்டில், தனது பாலினப் புத்தகத்தில் வேலை செய்கிறார். எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்!" என ட்வீட் செய்துள்ளார்.

அக்டோபர் 10, 2023 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டின் (@profCGoldin) எனப் பெயரிடப்பட்ட போலி 'X' பக்கத்திலிருந்து இந்த தவறான செய்தி பரவியதாக தெரியவருகிறது. அப்பதிவில், "ஒரு பயங்கரமான செய்தி. எனது அன்பான பேராசிரியர் அமர்த்தியா சென் சில நிமிடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வார்த்தைகள் இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உண்மைத்தன்மையை உறுதி செய்ய முயன்ற ஈடிவி பாரத், மற்றும் உண்மையான கிளாடியா கோல்டினுக்கு (@PikaGoldin) வேறு அதிகாரப்பூர்வ X கணக்கு இருப்பதை கண்டறிந்தது.

இந்த போலியான பதிவைக் கண்ட பிரபல பொருளாதார நிபுணரான பெஞ்சமின் ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித், அமர்த்தியா சென் உயிருடன் இருப்பதாகவும், இன்று அவருடன் பேசியதாகவும் உறுதிப்படுத்தும் விதமாக இப்போலி ட்வீட்டுக்கு பதிலளித்தார். " நாங்கள் அவருடன் பேசினோம், அவர் நிச்சயமாக இறக்கவில்லை. இது என்ன?" கோல்ட்ஸ்மித் ட்வீட் செய்துள்ளார்.

அமர்த்தியா சென் யார்?: 1933-ல் இந்தியாவில் பிறந்த அமர்த்தியா சென், ஒரு புகழ்பெற்ற இந்திய பொருளாதார நிபுணரும், தத்துவஞானி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் குறித்து நோபல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சமூகத் தேர்வு பற்றிய கோட்பாடுகள், நலன் மற்றும் வறுமை குறியீடுகளின் வரையறைகள், பஞ்சம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் முக்கியத்துவம் பெற்றவை. சென்னின் கூட்டு முடிவுகளில் தனிப்பட்ட மதிப்புகளை ஒருங்கிணைக்க அனுமதிக்கும் நிபந்தனைகள் மற்றும் தனிநபர் உரிமைகளுடன் ஒத்துப்போவதற்கான விதிகளுக்கு அனுதிக்கும் வரையறைகளை தெளிவுபடுததுள்ளதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. 1999-ல் பாரத ரத்னா விருது பெற்றவர். 2003-ல் யுனெஸ்கேபின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

இதையும் படிங்க:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details