தமிழ்நாடு

tamil nadu

பிஎஃப்ஐ ஆர்வலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு - தொண்டர்கள் கண்டன ஊர்வலம்... நாளை பந்த்

By

Published : Sep 22, 2022, 10:44 PM IST

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஎஃப்ஐ ஆர்வலருக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதைத்தொடர்ந்து பிஎஃப்ஐ தொண்டர்கள் நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

Etv Bharatபிஎஃப்ஐ  ஆர்வலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு  - PFI தொண்டர்கள்  கண்டன ஊர்வலம்
Etv Bharatபிஎஃப்ஐ ஆர்வலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு - PFI தொண்டர்கள் கண்டன ஊர்வலம்

திருவனந்தபுரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முக்கிய ஆர்வலர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று (செப்-22)அதிகாலை சோதனை குறித்த செய்திகள் வெளியானதைத்தொடர்ந்து PFI தொண்டர்கள் சோதனைகள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அணிவகுத்துச் சென்றனர்.

மேலும் அதன் விசாரணை அமைப்புகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னதாகவே சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக மத்தியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறு கேரள மாநிலத்திலும் இத்தகைய சோதனை நடைபெற்றது.

குறிப்பாக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக PFI வட்டாரம் தெரிவித்துள்ளது. முக்கியமாக மாநில மற்றும் மாவட்ட குழுக்களின் அலுவலகங்கள் மற்றும் அதன் அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தேசிய, மாநில மற்றும் மாவட்டத்தலைவர்கள் உட்பட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 14 நிர்வாகிகள் மத்திய அமைப்புகளால் மாநிலத்தில் இருந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பிஎஃப்ஐ செய்திக்குழு தெரிவித்துள்ளது.

பிஎஃப்ஐ மாநிலத்தலைவர் சிபி முகமது பஷீர், தேசிய தலைவர் ஓஎம்ஏ சலாம், தேசிய செயலாளர் நசருதீன் எளமரம் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொச்சியில் உள்ள என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிஎஃப்ஐ மூத்த தலைவர் அப்துல் சத்தர் கூறுகையில், 'பி.எஃப்.ஐ.யின் வளாகத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகள் பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழான அரசை ஆதரவளிக்கும் பயங்கரவாதத்தின் சமீபத்திய உதாரணம்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) அமைப்பின் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் அஷ்ரப் மௌலவி தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் உத்தரவை NIA செயல்படுத்துவதாகக் குற்றம்சாட்டி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாளை (செப்-23)காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடையடைப்புப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:அரசுக்கு அளிக்கும் ஆதரவை ஏன் பாஜக திரும்பப்பெறவில்லை? - நாரயணசாமி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details