தமிழ்நாடு

tamil nadu

வெடிகுண்டு வாகன உரிமையாளர் இறந்த வழக்கு: என்ஐஏ விசாரிக்க முடிவு!

By

Published : Mar 17, 2021, 3:08 PM IST

மும்பை: அம்பானி வீட்டருகே வெடிகுண்டுகளுடன் நின்ற காரின் உரிமையாளர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு செய்துள்ளது.

NIA
என்ஐஏ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். இவ்வழக்கைத் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்துவந்தது.

முதல்கட்ட விசாரணையில், அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கும், மும்பை காவல் ஆய்வாளருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சச்சின் வாஸிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்திய என்ஐஏ, அவரை கைது செய்து தற்போது கஸ்டடியில் வைத்துள்ளது.

இந்நிலையில், அந்த காரின் உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த கிடந்த வழக்கையும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு செய்துள்ளது. விரைவில், வெடிகுண்டு வாகனத்தை அம்பானி வீட்டருகே நிறுத்திய நபர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:செப்டிங் டேங்க் தோண்டிய போது மண் சரிந்து விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மூவர் உள்பட 5 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details