தமிழ்நாடு

tamil nadu

பரந்தூர் விமான நிலையம் 2024ஆம் ஆண்டுக்குள் தயாராகும் - ஜோதிராதித்ய சிந்தியா

By

Published : Dec 8, 2022, 7:05 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையமான பரந்தூர் விமான நிலையம் 2024ஆம் ஆண்டுக்குள் தயாராகும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தெரிவித்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தின் மக்களவையில் இன்று (டிசம்பர் 8) சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா பதிலளித்தார். அப்போது ஜோதிராத்திய சிந்தியா கூறுகையில், "சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் 2024ஆம் ஆண்டுக்குள் தயாராகும். அந்த ஆண்டே முனையம் திறக்கப்படும்.

முன்னதாக, சென்னையில் 2ஆவது விமான நிலையம் அமைக்க நான்கு இடங்களை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்தது. இதில், பரந்தூர் என்னுமிட்டத்தில் புதிய முனையம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. அதற்கான டெண்டர் கோரும் பணிகளும், நிலத்தை கையகப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்துவருகிறது. முதல்கட்டமாக ரூ. 2,895 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். அது முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கூடங்குளம்: 1,000 மெகா வாட் அலகுகளின் கட்டுமானம் 2027ஆம் ஆண்டிற்குள் முடியும்.. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

ABOUT THE AUTHOR

...view details