தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி சான்றிதழில் இனி நாமே திருத்தம் செய்யலாம்!

By

Published : Jun 9, 2021, 4:40 PM IST

Updated : Jun 9, 2021, 5:56 PM IST

பயனாளிகளின் கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையில்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் கோவின் செயலியில் 'ரைஸ் ஆன் இஷ்யூ' என்ற சிறப்பு அம்சத்தைச் சேர்த்துள்ளது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம்
கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம்

பயனாளிகளின் COVID தடுப்பூசி சான்றிதழ் பிழை இல்லாதவை என்பதை உறுதிப்படுத்த, கோவின் செயலியில் 'ரைஸ் ஆன் இஷ்யூ' என்ற சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் கவனக்குறைவான பிழைகள் இருந்தால் பயனாளிகளே அதில் பெயர், பிறந்த ஆண்டு, பாலினம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்யலாம். இதற்காக www.cowin.gov.in 'ரைஸ் ஆன் இஷ்யூ' என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அங்கு தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிழைகளை பயனாளிகள் சரிசெய்து கொள்ளலாம்" என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஷ் ஷீல் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை வரை நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 23.6 கோடி (23,61,98,726) கோவிட் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 9, 2021, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details