தமிழ்நாடு

tamil nadu

நேதாஜி பிறந்தநாளை அரசு விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு!

By

Published : Jan 19, 2021, 1:13 PM IST

டெல்லி: ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேதாஜி
நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி, அரசு விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேதாஜியின் தன்னலமற்ற சேவையை கவுரவிப்பதற்கும் நினைவில் கொள்வதற்கும், ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை ஜனவரி 23ஆம் தேதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பராக்கிராம் திவாஸ் (Parakram Diwas) என்ற பெயரில் கொண்டாடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பானது மேற்கு வங்கத்தில் வரவுள்ள தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டரில், நேதாஜியின் 125ஆவது பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவோம் எனத் தெரிவித்திருந்தார்

ABOUT THE AUTHOR

...view details